- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளை விட குறைவு ..முதன்மை கல்வி அலுவலர் முக்கிய உத்தரவு
தமிழகத்தில் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளை விட குறைவு ..முதன்மை கல்வி அலுவலர் முக்கிய உத்தரவு
By: vaithegi Wed, 29 June 2022 3:45:48 PM
தமிழகம்: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி அன்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ம் தேதி அன்றும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதன்படி, அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனால் அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கிடையே இடைநிற்றல் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
தமிழக அரசின் பட்ஜெட்டில் வருடத்திற்கு ரூ.35 ஆயிரம்கோடி வரை அரசு பள்ளிகளுக்கென்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அத்துடன் தற்போது அரசு பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட அலுவலக பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணி செய்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்களின் வரி பணத்தால் செயல்படுத்தப்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது பொது மக்களை மிகுந்த பெரும் வருத்தமடைய செய்கிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைய வாய்ப்பு உள்ளது.
அதனால் இதனை தடுக்கும் விதமாக தற்போது அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாகவும் அத்துடன் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்தது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் எந்தெந்த அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பதை கண்டறிந்து பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.