மண்ணச்சநல்லூர் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
By: Nagaraj Sat, 12 Aug 2023 5:20:04 PM
திருச்சி: விழிப்புணர்வு பேரணி... திருச்சி அருகே அரசு பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ச. அய்யம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தமிழகத்தில் போதை பொருள்களை ஒழிக்க அரசும் காவல் துறையும் இணைந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவ மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ச.அய்யம்பாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழுப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்புக்கு எதிரான வாசங்களை அடங்கிய பதாதைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் ஆசிரியைகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.