Advertisement

அரசுப் பள்ளிகள் என்பது பெருமையின் அடையாளம்

By: vaithegi Sat, 26 Nov 2022 6:53:00 PM

அரசுப் பள்ளிகள் என்பது பெருமையின் அடையாளம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்றும், நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை அடுத்து இவ்விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் நேரில் கலந்துகொண்டனர். இதன் பின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழாவில் தாமிரபரணியின் பழங்காலத்து பெயர் பொருநை என்று செல்கிறார்கள்.

government schools,m.k.stalin ,அரசுப் பள்ளிகள் ,மு.க.ஸ்டாலின்

இலக்கியவாதிகள் கற்பனை திறன் கொண்டவர்கள். திருநெல்வேலி வட்டாரம் என்று வரும் போது, இங்கு இருக்கின்ற எதார்த்தத்தை மீறாமல், அதை உள்ளடக்கி இலக்கியத்தை தரக்கூடியவர்கள்.அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம்.

மேலும் கிட்டத்தட்ட 37 ஆயிரத்து 588 பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் இருக்ககூடிய தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 6 பேரில் ஒருவர் பள்ளி மாணவர்களாக இருக்கின்றனர் என அவர் கூறினார்.

Tags :