Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி

துபாயில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி

By: Nagaraj Wed, 27 May 2020 9:00:51 PM

துபாயில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி

பல்வேறு நிபந்தனைகளுடன் துபாயில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரக்கணக்கான கோடி பணம் முடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத போதும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


conditions,theater,space,dubai,audiences ,நிபந்தனைகள், திரையரங்கு, இடைவெளி, துபாய், பார்வையாளர்கள்

இந்நிலையில் துபாயில் திரையரங்குகளை இன்று முதல் திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பட்டியலிட்டுள்ளது. மொத்த இருக்கைகளில் 30 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது.

பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இரு பார்வையாளர்களுக்கு இடையில் 2 மீட்டருக்கு மேல் இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னும் திரையரங்கத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

Tags :
|
|