Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஜூலை 8, 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு

தமிழகத்தில் ஜூலை 8, 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு

By: vaithegi Thu, 06 July 2023 12:09:58 PM

தமிழகத்தில் ஜூலை 8, 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு


சென்னை: தமிழகத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். எனவே இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.

மேலும் அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்பதால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இதையடுத்து இத்தகைய நெரிசல் மிகு நேரங்களில் போக்குவரத்து துறை சார்பாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

government transport department,special buses , அரசு போக்குவரத்து துறை ,சிறப்பு பேருந்துகள்

எனவே அதன்படி வரும் ஜூலை 8 மற்றும் தேதிகளில் வார இறுதியை முன்னிட்டு பி-பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்து உள்ளது.

அந்த வகையில் தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :