Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளைஞர்களுக்கு அரசு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் - பிரதமர் மோடி

இளைஞர்களுக்கு அரசு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் - பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 08 Nov 2020 11:12:13 AM

இளைஞர்களுக்கு அரசு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் - பிரதமர் மோடி

டெல்லி ஐ.ஐ.டி.யின் 51-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக பேசியபோது, சென்னை ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி.களில் எல்லாம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்கிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், இளைஞர்களின் எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு, இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழைய தசாப்தத்தின் சட்டங்களும், விதிகளும் அடுத்த தசாப்தத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது. எனவே, பழைய சட்டங்களும், விதிமுறைகளும் மாற்றப்படுகின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலகமயமாக்கல் அவசியம் என்பதை மக்களுக்கு கற்பித்து உள்ளது. அதே நேரத்தில் தன்னம்பிக்கை சம அளவில் முக்கியமானது என்று கூறினார்.

government,opportunities,prime minister,modi ,அரசு, வாய்ப்பு, பிரதமர், மோடி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கடினமான காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது. மேலும் இன்று அது நடைமுறையை மாற்றி இருக்கிறது. மெய்நிகர் உண்மை, இப்போது உண்மை வேலையாக மாறிவிட்டிருக்கிறது. தன்னிறைவு இந்தியா திட்டம், எந்த சிரமும் இன்றி, இளைஞர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகளை அளிக்கிறது.

இந்த நாள், சர் சி.வி.ராமன் பிறந்த நாள் ஆகும். அவரது சிறப்பான பணி மக்களுக்கு குறிப்பாக இளம் விஞ்ஞானிகளுக்கு புதிய உத்வேகத்தை நீண்ட காலத்துக்கு அளிக்கும். இந்த நாடு உங்களுக்கு எளிதாக தொழில் தொடங்கி நடத்துகிற வாய்ப்பை அளிக்கும். நீங்கள் மக்களின் எளிதான வாழ்க்கைக்காக உழைக்க வேண்டும். இது தன்னிறைவு இந்தியா பிரசாரத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags :