Advertisement

'நீட்' தேர்வு சம்பந்தமாக அரசின் தற்போதைய நிலைப்பாடு

By: vaithegi Mon, 23 Jan 2023 4:59:56 PM

'நீட்' தேர்வு சம்பந்தமாக அரசின் தற்போதைய நிலைப்பாடு

சென்னை: சென்னை கிண்டியில் சுமார் 4.9 ஏக்கர் நிலப்பரப்பில், 18 துறைகளுடன் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.

ஆய்வுப் பணிகள் முடிந்ததும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் மிக வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது.

neat,m.k. stalin ,நீட்,மு.க.ஸ்டாலின்

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், 'நீட்' தேர்வு சம்பந்தமாக தலைமைச்செயலகத்தில் சிறிது நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சில தெளிவுகள் (கிளாரிபிகேஷன்ஸ்) கேட்டு கடிதம் வந்திருக்கிறது.

அந்த கடிதத்திற்கான பதில் அனுப்புகின்ற முயற்சியினை சட்டத்துறை செய்து கொண்டிருக்கிறது. சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி இன்னும் ஓரிரு வார காலத்திற்குள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு அந்த பதில் அனுப்பப்பட இருக்கிறது' என அவர் தெரிவித்தார்

Tags :
|