Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு புதிய திட்டம்

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு புதிய திட்டம்

By: vaithegi Sat, 12 Aug 2023 10:31:09 AM

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு புதிய திட்டம்

இந்தியா: வெங்காயத்தின் விலை அதிகமாகும் நேரத்தில் விற்பனை செய்வதற்காக 3 லட்சம் டன் வெங்காயம் பராமரிக்கப்பட்டு வருவதாக அரசு அறிவிப்பு ..இந்தியாவில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் தக்காளி, இஞ்சி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தக்காளியின் விலை கிலோக்கு ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு விலை குறைந்திருக்கிறது.

government,onion ,அரசு ,வெங்காயம்


மேலும், கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விளைச்சல் குறைந்து சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 3 லட்சம் டன் வெங்காயத்தை பாதுகாப்பாக வைத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, விலைநிலைப்படுத்துதல் நிதியின் அடிப்படையில் 3 லட்சம் டன் வெங்காயம் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், விலை அதிகமாகும் நேரங்களில் ஈ-காமர்ஸ் மற்றும் தள்ளுபடி விலையில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் பெரு நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :