கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியின் கவர்னராக பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு
By: Monisha Tue, 02 June 2020 12:35:00 PM
கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியின் கவர்னராக பொறுப்பு ஏற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கவர்னர் மாளிகையில் இதுவரை நடந்துள்ள பணிகள் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
அரசு அதிகாரிகள், பொதுமக்களுடன் ஒன்றிணைந்து அனைத்து பிராந்தியங்களிலும் கடந்த 4 ஆண்டுகளாக கவர்னர் மாளிகை பணியாற்றியுள்ளது. 5-ம் ஆண்டு தொடக்கம் புதியவழி மக்கள் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இணையவழி தொடர்பு, காணொலி காட்சி என மத்திய அரசின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகின்றது.
ஊரடங்கு காலத்திலும் கவர்னர் மாளிகையை மக்கள் எளிதாக அணுகும்படி தொலைபேசி, வாட்ஸ் அப், மின்னஞ்சல், கட்டுப்பாட்டு அறை எண்கள் ஆகியவற்றின் மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நேரில் சந்திப்புகள் நடைபெறும் என நம்புகிறேன்.
கடந்த 4 ஆண்டில் புதுவை கவர்னர் மாளிகையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குறை மற்றும் புகார்களை பெற்று கவனித்து தீர்வு காணப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையுடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.