Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக ஆளுநர்- முதல்வரை சந்திக்கிறார் பாஜ தலைவர் எல்.முருகன்

தமிழக ஆளுநர்- முதல்வரை சந்திக்கிறார் பாஜ தலைவர் எல்.முருகன்

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:05:08 AM

தமிழக ஆளுநர்- முதல்வரை சந்திக்கிறார் பாஜ தலைவர் எல்.முருகன்

இன்று சந்திப்பு... தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்கிறார்.

மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

chief minister,governor,bjp tamil nadu chairman,approval,bill ,முதல்வர், ஆளுநர், பாஜ தமிழக தலைவர், ஒப்புதல், சட்ட மசோதா

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்த நிலையில் தமிழக அரசு, உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டது.

இதை தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சூழலில் தான் எல்.முருகன் முதல்வரை சந்தித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கவுள்ளார் .

Tags :