Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வாக டிஜிட்டல் இந்தியா சேவை இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவிப்பு

ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வாக டிஜிட்டல் இந்தியா சேவை இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவிப்பு

By: vaithegi Sun, 27 Aug 2023 10:24:24 AM

ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வாக டிஜிட்டல் இந்தியா சேவை இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவிப்பு

சென்னை: டிஜிட்டல் இந்தியா மூலம் ஊழலுக்கு தீர்வு ... திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தில் நடைபெற்ற தஷா 2.0 கருத்தரங்கு கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். இதனையடுத்து அப்போது பேசிய அவர்,

“இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், ஊழலை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வாக டிஜிட்டல் இந்தியா சேவை இருக்கிறது. அரசின் பணம் நேரடியாக பயனாளிகளுக்கு சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடியவில்லை.


governor ravi,digital india ,ஆளுநர் ரவி , டிஜிட்டல் இந்தியா

இதையடுத்து அரசு 1 ரூபாய் ஒதுக்கினால் பயனாளிகளுக்கு 15 பைசா மட்டுமே சென்றடைந்தது. இதற்கு தீர்வாக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கே பணம் நேரடியாக சென்றடைகிறது.

மத்திய அரசு தொலைநோக்கு திட்டங்களை தீட்டுவதால் நாடு மேம்பாடு அடைகிறது. சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்” எனஅவர் கூறினார்.

Tags :