Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

By: vaithegi Sat, 29 Oct 2022 2:47:13 PM

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ... தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரிடம் கோரிக்கை வந்தது. இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வதற்கான சட்டம் இயற்ற தேவையான ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது ஆய்வின் அறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

எனவே இதன் அடிப்படையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா அண்மையில் சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

governor,online casino game ,ஆளுநர் ,ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு

இதனை அடுத்து விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வரவுள்ளது.அதனால் இனி ஆன்லைன் விளையாட்டு குறித்த விளம்பரங்களை ஊடகங்கள் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மீறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :