Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது ஏன் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது ஏன் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

By: vaithegi Thu, 09 Mar 2023 12:15:24 PM

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது ஏன் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

சென்னை: ஆன்லைன் ரம்மியால் இதுவரை மட்டும் 44 பேர் இறந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இதையடுத்து அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி,

2022 -ம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடியதை தொடர்ந்து அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்டம் மசோதா அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ஆம் தேதி அனுப்பப்பட்டது.

governor,online rummy ,ஆளுநர் ,ஆன்லைன் ரம்மி

ஆனால் மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். மேலும் கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி, அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

Tags :