Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளது ... கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்

காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளது ... கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்

By: vaithegi Sat, 28 Jan 2023 6:26:30 PM

காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல்வேறு  தொடர்புகள் உள்ளது ...   கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் வளாகத்தில் "விட்டஸ்டா 2023" நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது, வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டும் அல்ல.

governor,rn ravi ,கவர்னர் ,ஆர்.என்.ரவி

அதில் நம் வாழ்வியலும் அடங்கும் என்றார். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளது. இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என அவர் கூறினார்.

மேலும் 18-ம் நூற்றாண்டு முன் வரை பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாக இந்தியா இருந்துள்ளது எனவும், அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Tags :