Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காஷ்மீர் செல்கிறார்

By: vaithegi Sun, 25 June 2023 09:30:22 AM

ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காஷ்மீர் செல்கிறார்


காஷ்மீர் : 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து இன்று காஷ்மீர் பயணம் ... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன் தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவர் டெல்லியில் 4 நாட்கள் தங்கியிருந்து தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி குறித்து அவர் விவாதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில், அதனை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது.

kashmir,governor rn ravi ,காஷ்மீர் ,ஆளுநர் ஆர்.என்.ரவி


இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பப்பட்டது. மேலும் டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. டெல்லி ஆளுநர் அங்குள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் கலாசார விழாவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக சென்னைக்கு புறப்படுவார் என்று தெரிகிறது.

Tags :