Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

By: vaithegi Thu, 03 Nov 2022 11:01:39 AM

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று  டெல்லி பயணம்

இந்தியா : இன்று டெல்லி பயணம் ... தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டது முதல் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் அவருக்கு எதிர்ப்புகள் தெரிவித்து கொண்டு வருகின்றனர். இதனால் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து திமுகவினரும் கூட்டணி கட்சியனரும் வலியுறுத்தி கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி .ஆர். பாலு. இதற்காக ஒத்த கருத்துடைய எம்பிக்கள் அனைவரும் இக்கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார்.

delhi,govt ,டெல்லி ,ஆளுநர்

சென்னை அறிவாலயத்திற்கு வந்து அனைவரும் கையெழுத்திட வேண்டும் என அந்த அழைப்பு விடுத்திருக்கிறார். இதை அடுத்து திமுக எம்பி களும் திமுக கூட்டணி கட்சிகள் எம்பிகளும் இந்த கடிதத்தில் கையெழுத்திட உள்ளனர் .

இதனை அடுத்து இந்த பரபரப்பான சூழ்நிலையில் 2 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். இன்று காலையில் 10:30 மணிக்கு அவர் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருக்கிறார் ஆளுநர் ஆர். என். ரவி என தகவல் வெளியாகி இருக்கிறது .ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த டெல்லி பயணம் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Tags :
|