ஆளுநர் 2 நாட்கள் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம்
By: vaithegi Thu, 28 Sept 2023 09:37:10 AM
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் ... ஆளுநர் ஆர்.என். ரவி இன்று முதல் 2 நாட்கள் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அந்த வகையில் இன்றும், நாளையும் தென்காசி, விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி பங்கேற்கிறார். சென்னையில் இன்று பு`றப்படும் ஆளுநர் ரவி தூத்துக்குடி விமானம் நிலையம் செல்கிறார்.
தூத்துக்குடியிலிருந்து குற்றாலம் செல்லும் ஆளுநர் ரவி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். ஆழ்வார்குறிச்சியில் பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் .
இதையடுத்து மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று குழந்தைகள், பணியாளர்களை சந்திக்கிறார் . நாளை நெற்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவர் அரண்மனையை பார்வையிடுகிறார்.