Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி

உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி

By: Nagaraj Tue, 04 July 2023 9:35:07 PM

உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி

சென்னை: உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் ரவி அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.

agitation,higher education,governor discontent,activities ,பரபரப்பு, உயர் கல்வித்துறை, ஆளுநர் அதிருப்தி, செயல்பாடுகள்

நேர்மையான முறையில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.

கூடுதல் பொறுப்பு என்ற நிலையிலேயே இந்த பணியிடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழக செயல்பாடுகள் முடங்கி உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :