Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலங்களில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் ஆளுநர்கள் அரசியல் செய்யக்கூடாது

மாநிலங்களில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் ஆளுநர்கள் அரசியல் செய்யக்கூடாது

By: Nagaraj Thu, 16 Feb 2023 10:44:23 PM

மாநிலங்களில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் ஆளுநர்கள் அரசியல் செய்யக்கூடாது

டெல்லி: உச்ச நீதிமன்றம் கருத்து... மாநிலங்களில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிந்து, பா.ஜ.க,வின் உதவியுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு அமைந்தது. இதன் விளைவாக, உண்மையான சிவசேனா யாருடையது, கட்சியின் சின்னமான வில் அம்பு யாருக்குச் சொந்தம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த பிறகு, வழக்கு முடிந்துவிட்டது என்று ஷிண்டே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இது ஒரு ஒப்பந்தம் அல்ல என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடாவிட்டால் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்திருக்க மாட்டார் என்றும் கூறினார்.

governors,investigation,the supreme court ,ஆளுநர்கள் அரசியல், உச்சநீதிமன்றம் கருத்து, பரபரப்பு

ஏனெனில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க அவருக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

சட்டப் பேரவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே கூட்டணி ஆட்சி அமைத்தார் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷாந்த் மேத்தா கூறிய போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் எப்படிச் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்று கூறிய அவர், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு ஷிண்டே தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது

Tags :