Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக ஆளுநர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக ஆளுநர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

By: vaithegi Thu, 24 Aug 2023 11:48:29 AM

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக ஆளுநர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

இந்தியா: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று (ஆக 23) மாலை வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று உள்ளது. இந்தியாவின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் ‘சந்திரயான்-3’ வெற்றி பற்றி பெருமிதம் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சந்திரயான்-3 பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசம்பெருமிதம் கொள்கிறது. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவை சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மாபெரும் வரலாற்றுச் சாதனை சந்திரயான்-3. நாட்டுக்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.

chandrayaan 3,governors,tamil nadu chief minister stalin ,சந்திரயான் 3,ஆளுநர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின்


முதல்வர் மு.க.ஸ்டாலின்: சந்திரயான்-3 வெற்றிக்காக அயராது பாடுபட்ட இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள். சந்திரயான் 1, 2, 3 திட்டங்களை, மயில்சாமி அண்ணாதுரை, மு.வனிதா, ப.வீரமுத்துவேல் என தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த அறிவியலாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தியுள்ளனர். இவர்களது அர்ப்பணிப்புணர்வும், திறமையும் எழுச்சியூட்டுகிறது.

இதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், திக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர்அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,

அதைத்தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐஜேகே நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., தலைவர் ரவிபச்சமுத்து, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமக தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்பினர் தங்களது வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags :