Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தொண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல்

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தொண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல்

By: Nagaraj Thu, 11 June 2020 08:31:10 AM

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தொண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல்

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை கண்ணியமாக அடக்கம் செய்ய தொண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனாவில் இறப்பவர்களை கண்ணியமாக அடக்கம் செய்ய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவன அமைப்பிற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுடன் இறந்த சென்னையை சேர்ந்தவரின் உடலை சவக்குழியில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மூன்று ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுடன் இறந்த விழுப்புரத்தை சேர்ந்த முதியவரின் உடலை கட்டணமின்றி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் அடக்கம் செய்தனர்.

charity,corona,dying,burial,consent ,தொண்டு நிறுவனம், கொரோனா, இறப்பவர்கள், அடக்கம், ஒப்புதல்

முதியவருக்கு இந்து மத முறைப்படி இறுதி சடங்கு நடக்க அனைத்து உதவிகளையும் செய்தனர்.

இதையடுத்து, கொரோனாவில் இறப்பவர்களை கண்ணியமாக அடக்கம் செய்ய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கான உழவர்கரை நகராட்சியின் சுற்றறிக்கை, உள்ளாட்சித் துறை செயலர், மாவட்ட கலெக்டர், சப் கலெக்டர், போலீசார், ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அரசு அழைத்தால், இந்த தொண்டு நிறுவனம் முன்னின்று உதவி செய்யும். அரசு மருத்துவ மனைகளில் இருந்து நோயாளியின் உடலை பெற்று அரசு அதிகாரிகள், குடும்பத்தினர் முன்னிலையில் கண்ணியமாக அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இலவசமாக செய்து தரும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை, கிருமி நாசினி உள்ளிட்டவைகளை அரசு வழங்கும்.

Tags :
|
|
|