Advertisement

புதுச்சேரியில் பால் விலையை உயர்த்த அரசு முடிவு

By: vaithegi Tue, 27 Dec 2022 3:51:34 PM

புதுச்சேரியில் பால் விலையை உயர்த்த அரசு முடிவு

புதுச்சேரி: பால் விலையை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு .... புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான 'பாண்லே' மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து தரமாகவும், சலுகை விலையிலும் கிடைப்பதால் இந்த பொருட்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில், அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.



milk price,puducherry ,பால் விலை,புதுச்சேரி

எனவே அதன்படி, தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு லிட்டர் பால், 4 ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.

இதேபோன்று கொள்முதல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து 34ல் இருந்து 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஓராண்டாக பாண்லே தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் நஷ்டத்தை ஈடுகட்ட பால் விலை அதிகரித்தப்படுவதாக கூறப்படுகிறது.

Tags :