Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி

By: Monisha Thu, 24 Sept 2020 3:41:27 PM

தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி தற்போது ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெற்றோர் மாற்றும் மாணவர்கள் மத்தியில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அக்.1ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்.1ந்தேதி முதல் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்டுகிறது.

tamil nadu,schools,students,teachers,education ,தமிழ்நாடு,பள்ளிகள்,மாணவர்கள்,ஆசிரியர்கள்,கல்வி

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்படுகிறது. மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம்.

ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :