Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹரியானாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியவிலையில் எண்ணெய் வழங்குவதற்கு அரசு திட்டமிடல்

ஹரியானாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியவிலையில் எண்ணெய் வழங்குவதற்கு அரசு திட்டமிடல்

By: vaithegi Sun, 03 Sept 2023 4:17:11 PM

ஹரியானாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியவிலையில் எண்ணெய் வழங்குவதற்கு அரசு திட்டமிடல்

ஹரியானா: ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கி வருகிறது. எனவே இதன் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாநிலத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு 2 லிட்டர் கடுகு எண்ணெய் வழங்குவதற்கு மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை ஆய்வாளர் உத்தரவிட்டார்.

haryana,oil,ration card holders ,ஹரியானா,எண்ணெய் ,ரேஷன் அட்டைதாரர்கள்

இதையடுத்து கடுகு எண்ணெயின் விலையானது சந்தையில் தற்போது லிட்டர் ரூபாய் 180 க்கு விற்று வரும் நிலையில் ரூபாய் 20 என்ற மானிய விலையில் ஒரு ரேஷன் அட்டைக்கு 2 லிட்டர் கடுகு எண்ணெய் அளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே பயனடைய முடியும். ரேஷன் கிடங்கில் பொருத்தப்பட்டு உள்ள இயந்திரத்தில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே கடுகு எண்ணெய் வழங்கப்பட உள்ளது.

Tags :
|