Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுக்கடைகளுக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை

மதுக்கடைகளுக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை

By: vaithegi Tue, 18 July 2023 12:20:07 PM

மதுக்கடைகளுக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை

சென்னை:வாராந்திர விடுமுறை – அரசு பரிசீலனை ... தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து கொண்டு வருகின்றனர். இது தொடர்பான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. இந்நிலையில் மது கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இது தொடர்பாக டாஸ்மார்க் பணியாளர் சங்க பொது செயலாளர், கேரளாவில் உள்ள மதுக்கடைகளில் மது விற்பனைக்கு ஒரு கவுண்டரும் பணம் பெறுவதற்கு ஒரு கவுண்டர் என தனித்தனியாக உள்ளது.

holiday,liquor store` ,விடுமுறை ,மதுக்கடை


இதனால் கடைகளில் கூட்டம் சேர்வதில்லை. ஆனால் அதே நேரம் அங்கு மது கடை ஊழியர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் மதுக்கடை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான விடுப்பும் வழங்கப்படுகிறது.

இதே போன்று தமிழகத்திலும் மது கடை ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். இது ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து கொண்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதனால் ஒருநாள் குடிப்பதும் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags :