Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் சிறை மற்றும் அபராதம் .. அரசு எச்சரிக்கை

அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் சிறை மற்றும் அபராதம் .. அரசு எச்சரிக்கை

By: vaithegi Fri, 09 June 2023 10:52:31 AM

அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் சிறை மற்றும் அபராதம்   ..  அரசு எச்சரிக்கை

சென்னை: விளம்பர பலகைகள் பேனர்கள் மற்றும் பதாகைகள் அனுமதியின்றி நிறுவக்கூடாது என தமிழக அரசு தெரிவிப்பு ..... தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள் வைத்தால் நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளருக்கு 3 வருட சிறை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

government,jail,fine,banner,banners ,அரசு ,சிறை ,அபராதம்,பேனர், பதாகைகள்

இதனை அடுத்து உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால், பேனர், விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்களோ, நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளர்களோ தரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|
|