Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்

யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Mon, 02 Oct 2023 12:33:47 PM

யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை பட்டதாரிகள்  வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுளதாவது : யுஜிசி நெட் தேர்வு வருகிற டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.

graduates,ugc net exam ,பட்டதாரிகள்  ,யுஜிசி நெட் தேர்வு


இதனை அடுத்து பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக வருகிற அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வருகிற அக்.29-ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இஎனவே தற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

Tags :