Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிக்கிம் மாநிலத்தில் பாரா கிளைடரில் பறந்து சாதித்த மூதாட்டி

சிக்கிம் மாநிலத்தில் பாரா கிளைடரில் பறந்து சாதித்த மூதாட்டி

By: Nagaraj Sun, 08 Nov 2020 2:28:00 PM

சிக்கிம் மாநிலத்தில் பாரா கிளைடரில் பறந்து சாதித்த மூதாட்டி

பாரா கிளைடரில் பறந்த மூதாட்டி... சிக்கிம் மாநிலத்தில் 68 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.

சிக்கிம் தலைநகரான காங்டாக்கில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ரங்கா என்ற சிறு நகரம் இருக்கிறது. அங்கு பாராகிளைடிங் முனை அமைந்துள்ளது. அங்கிருந்து 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் பறந்துள்ளார்.

அவர் வானில் 4,500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்தார். கீழ் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அவரை ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

grandmother,record,para glider,flew,in the sky ,மூதாட்டி, சாதனை, பாரா கிளைடர், பறந்தார், வானில்

சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் மிக அதிக வயதில் பிறந்தவர் இவர் மட்டும்தான். இதற்கு முன்னதாக 68 வயதுடைய ஆண் ஒருவர் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்துள்ளார்.

இதுபற்றி வானில் பறந்த அந்த மூதாட்டி கூறுகையில், "இது ஒரு சுகமான அனுபவம். நான் வானில் பறப்பதற்கு பயப்படவில்லை. அதற்கு பதிலாக அதனை ரசித்து அனுபவித்தேன். எனக்கு முன்னால் பறந்து சென்ற 17 வயது பேத்தி, கொஞ்சம் பயந்தாள். ஆனால் எனக்கு எந்த ஒரு அச்சமும் இல்லை. வானில் பறப்பது எப்படி இருக்கும் என்று நான் உணர விரும்பினேன். இவை எனது சாகச விளையாட்டு கிடையாது. இதுவே கடைசி விளையாட்டாகவும் இருக்காது" என்று அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|