Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மயிலாடுதுறையில் வரும் செப்.16 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் வரும் செப்.16 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 05 Sept 2023 3:08:31 PM

மயிலாடுதுறையில் வரும்  செப்.16 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ...தமிழகத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆயிரகணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில், வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,mayiladuthurai ,வேலைவாய்ப்பு முகாம்,மயிலாடுதுறை

இதையடுத்து இந்த முகாம் காலை 8:30 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் நடைபெற இருக்கும் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 10 -ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்கிற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு மூலம் முன்பதிவு செய்து தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Tags :