Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்டாக் செயலியை நீக்க வேண்டும் என அமேசான் தவறுதலாக அனுப்பிய இமெயிலால் பெரும் பரபரப்பு

டிக்டாக் செயலியை நீக்க வேண்டும் என அமேசான் தவறுதலாக அனுப்பிய இமெயிலால் பெரும் பரபரப்பு

By: Karunakaran Sat, 11 July 2020 9:38:36 PM

டிக்டாக் செயலியை நீக்க வேண்டும் என அமேசான் தவறுதலாக அனுப்பிய இமெயிலால் பெரும் பரபரப்பு

லடாக் விவகாரம் காரணமாக டிக்டாக் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு இந்திய அரசு அதிரடி தடை விதித்தது. இதுகுறித்து கடந்த 8 ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கருத்து தெரிவித்திருந்தபோது, டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயனாளர்களின் தகவல்களை சீனா உளவு பார்க்கிறது என்று கூறினார்.

மேலும், இந்த செயலிகளை அமெரிக்காவில் தடை செய்ய ஆலோசனை நடைபெறுவதாக கூறினார். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நேற்று தனது நிறுவன ஊழியர்களுக்கு செல்போனில் இருந்து டிக்டாக் செயலியை ஊழியர்கள் உடனடியாக நீக்கம் செய்யவேண்டும் என இமெயில் ஒன்றை அனுப்பியது.

tiktok,amazon,email,america ,டிக்டாக், அமேசான், மின்னஞ்சல், அமெரிக்கா

அமேசான் நிறுவனத்தின் பாதுகாப்பு நலனுக்காக ஊழியர்கள் தங்கள் செல்போனில் உள்ள டிக்டாக்கை உடனடியாக நீக்கவேண்டும் என இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஊழியர்கள் மத்தியிலும் டிக்டாக் நிறுவனத்தின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின், டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அமேசானை தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டனர்.

இமெயில் அனுப்பிய சில மணி நேரங்களுக்கு பின், டிக்டாக்கை ஊழியர்கள் உடனடியாக தங்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என தவறுதலாக இமெயில் அனுப்பப்பட்டு விட்டதாக டிக்டாக் செயலியை வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Tags :
|
|
|