Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா- அமெரிக்க உறவில் அதிக முன்னேற்றம்; வெள்ளை மாளிகை தகவல்

இந்தியா- அமெரிக்க உறவில் அதிக முன்னேற்றம்; வெள்ளை மாளிகை தகவல்

By: Nagaraj Tue, 18 Aug 2020 7:52:12 PM

இந்தியா- அமெரிக்க உறவில் அதிக முன்னேற்றம்; வெள்ளை மாளிகை தகவல்

இந்தியா- அமெரிக்க உறவில் அதிக முன்னேற்றம் காட்டியவர் அதிபர் டிரம்ப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிபர்களை காட்டிலும் தற்போதைய அதிபர் டிரம்ப், இந்தியா-அமெரிக்கா உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

prime minister modi,president trump,white house,progress ,பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகை, முன்னேற்றம்

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா -இந்தியா நல்லுறவுக்கு டிரம்ப் முன்னுரிமை கொடுப்பதாகவும், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடனான உறவை அனைத்து நிலைகளிலும் மேம்படுத்த தீவிரமாக பணியாற்றியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

வரும் காலங்களிலும் அமெரிக்கா-இந்தியா நல்லுறவை டிரம்ப் மேம்படுத்துவார் என்ற அந்த அதிகாரி, ஒப்பந்தமில்லாத கூட்டாளி அந்தஸ்தை இந்தியாவுக்கு முதன்முதலாக அவர்தான் அளித்தார் எனவும், டிரம்ப் அதிபரான பிறகு வெள்ளை மாளிகை வந்த வெளிநாட்டுத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் எனவும் தெரிவித்தார்

Tags :