Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பச்சை மிளகாய், பேனா முனை, கேக்: கர்நாடகா தேர்தலில் சுயேட்சைகள் தேர்வு செய்த சின்னங்கள்

பச்சை மிளகாய், பேனா முனை, கேக்: கர்நாடகா தேர்தலில் சுயேட்சைகள் தேர்வு செய்த சின்னங்கள்

By: Nagaraj Sat, 06 May 2023 09:36:49 AM

பச்சை மிளகாய், பேனா முனை, கேக்: கர்நாடகா தேர்தலில் சுயேட்சைகள் தேர்வு செய்த சின்னங்கள்

பெங்களூரு: பச்சை மிளகாய், பேனா முனை, கேக், வைரம், பேட்ஸ்மேன் இவை அனைத்தும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைகள் தேர்வு செய்திருக்கும் தேர்தல் சின்னங்கள்.

பொதுவாகவே மக்கள் அனைவரும் மிகப்பெரிய கட்சிகளின் சின்னங்களைத்தான் நினைவில் வைத்திருப்பார்கள். சூரியன், இரட்டை இலை, தாமரை, கைச் சின்னம் போன்றவை இதில் அடங்கும். ஆனால், தற்போது சுயேச்சைகள் தேர்வு செய்திருக்கும் சின்னங்கள் நிச்சயம் வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

பெங்களூருவில் இருக்கும் 28 தொகுதிகளில் போட்டியிடும் 50க்கும் மேற்பட்ட சுயேச்சைகள், ஹெலிகாப்டர், லேப்டாப், சித்தார் கருவி, கிணறு, நடைவண்டி, பைனாகுலர், போன் சார்ஜர், கால்பந்து, கைத்தடி, அன்னாசி பழம், திராட்சை, டியூப் லைட், டையர், சிசிடிவி கேமரா, ஷூ என தங்களது சின்னங்களாக தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

 ,வாக்களிக்கும், நபர்கள், படிப்பறிவு, வேட்பாளர், வசதி, தேர்தல் சின்னங்கள்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சுயேச்சைகள் தாமாக எதையும் தேர்வு செய்ய முடியாது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் வரையறுத்து வைத்திருக்கும் சின்னங்களில் மூன்று சின்னங்களை அவர்கள் தங்களுக்கு வழங்குமாறு பரிந்துரைக்கலாம். அதில் ஒன்றை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் அடைந்தபோது, படிப்பறிவு இல்லாத மக்கள் தங்களது வேட்பாளரை தேர்வு செய்ய வசதியாக தேர்தல் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. குறிப்பாக பெங்களூரு போன்ற பகுதிகளில் சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கும் நபர்கள் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.

Tags :