Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் தலைவராக தேர்வான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் வாழ்த்து

காங்கிரஸ் தலைவராக தேர்வான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் வாழ்த்து

By: Nagaraj Thu, 20 Oct 2022 09:40:04 AM

காங்கிரஸ் தலைவராக தேர்வான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் வாழ்த்து... காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர்.

greetings,congress president,prime minister,twitter account,sweet ,வாழ்த்துக்கள், காங்கிரஸ் தலைவர், பிரதமர், டுவிட்டர் பதிவு, இனிமை

வாக்கு எண்ணிக்கை இறுதியில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் பிரதமர் நரேந்திரமோடியும் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமைய எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்

Tags :