Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

By: vaithegi Sun, 14 May 2023 2:16:07 PM

அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இதனை ஒட்டி தலைவர்கள் , பிரபலங்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது , உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என் தெரிவித்துள்ளார்.

chief minister,happy mothers day ,முதலமைச்சர் ,அன்னையர் தின வாழ்த்துகள்

அதேபோன்று , திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்!

அன்னையர் நாள் வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய தந்தை கருணாநிதி மற்றும் அம்மா ராஜாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tags :