Advertisement

குழந்தைகள் தினம் ... முதல்வர் மு. க .ஸ்டாலின் வாழ்த்து

By: vaithegi Mon, 14 Nov 2022 11:46:11 AM

குழந்தைகள் தினம்    ...  முதல்வர் மு. க .ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு. க .ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு ... இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் குழந்தைகளுக்கு ’புத்தக பேக் இலவச நாள்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தினம் பள்ளிகளுக்கு குழந்தைகள் புத்தகங்கள் எடுத்துச் செல்லாமல், விளையாட்டுப்பொருட்கள் அவர்கள் எடுத்துச்செல்ல பள்ளிகள் அறிவித்திருக்கிறது. பள்ளிகளில் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை திறன்கள் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

principal,children ,முதல்வர் ,குழந்தைகள்

இதையடுத்து இந்த நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். இது பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், குழந்தைகள் நலனில் அக்கறை உள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு என பல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது

குழந்தைகளின் மன நலன், உடல் நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி பல திட்டங்களை அரசு செயல்படுத்தி கொண்டு வருகிறது. மேலும் எந்த குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக் கூடாது என்பது அரசின் இலக்கு என அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags :