Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்து

அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்து

By: vaithegi Sun, 26 Nov 2023 3:12:38 PM

அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்து

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இதனையொட்டி தமிழக மக்களுக்கு தலைவர்கள் பலரும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

karthikai,annamalai ,கார்த்திகை ,அண்ணாமலை

இதனை அடுத்து இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கார்த்திகை தீபத் திருநாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் . கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும். அனைவர் இல்லங்களையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். இறைவன் அருள் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :