- வீடு›
- செய்திகள்›
- தண்ணீர் திருடும் கும்பலால் நிலத்தடி நீர்மட்டம் குறைவு... நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
தண்ணீர் திருடும் கும்பலால் நிலத்தடி நீர்மட்டம் குறைவு... நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
By: Nagaraj Sat, 10 Dec 2022 3:12:21 PM
கரூர்: பொதுமக்கள் கோரிக்கை... கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நொய்யல் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் ஏராளமான நடைத் தண்ணீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும் அபாய நிலை உள்ளது. எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடும் லாரிகளை பறிமுதல் செய்து தண்ணீர் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.