Advertisement

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?

By: vaithegi Wed, 19 Apr 2023 11:27:29 AM

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?

சென்னை: குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும், குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் ... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி குரூப்-1 முதல் நிலை தேர்வு 92 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்றது.

அதைப்போன்று, 5,446 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

group 1,group 2 exam results ,குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள்

எனவே அதன்படி, குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் மற்றும் குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இந்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் வெளியாகும்.

இதனை அடுத்து 5,446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வுகளின் முடிவுகள் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tags :