Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

By: Nagaraj Sun, 26 Feb 2023 1:58:47 PM

குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடந்தது. ஆனால் தேர்வு தொடங்கும் முன்னர் ஒரு சில மையங்களில் தேர்வர்களின் பதிவெண்களில் சில குளறுபடிகள் ஏற்பட்டு அதன் பின்னர் அவை சரி செய்யப்பட்டு சில இடங்களில் தாமதமாக தேர்வுகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து இது பற்றிய் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குரூப் 2 முதன்மை தேர்வில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு, தாமதமாக தொடங்கியுள்ளது.

anbumani ramadoss,government,emphasis,chaos,tension free environment ,அன்புமணி ராமதாஸ், அரசு, வலியுறுத்தல், குளறுபடி, பதட்டமில்லா சூழல்

மேலும் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. இதற்கு டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே முக்கிய காரணம் என குறிப்பிட்ட அவர், அனைவரும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் , தேர்வர்களுக்கு மனஉளைச்சல், பதட்டமில்லா சூழல் உருவாக்கி ஒன்றை தரவேண்டும்.

ஆதலால், வேறு இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்து சரி செய்து வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இந்த தேர்வை மீண்டும் நடத்தவேண்டும். என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags :
|