Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை

கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை

By: Monisha Wed, 22 July 2020 2:34:12 PM

கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தற்போது பரிசோதனை எண்ணிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தினமும் 50 ஆயிரம் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பிசிஆர் கருவியின் விலை அதிகம். அதுமட்டுமல்லாது, முடிவு வருவதற்கும் காலதாமதம் ஆகிறது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு பரிசோதனை என்பது 10 பேரின் ரத்தம் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்தால் 10 பேருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகவிடும். பாசிட்டிவ் வந்தால் அதன்பிறகு ஒவ்வொருவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு இவ்வாறு குழு பரிசோதனை செய்தால் விரைவாக நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Tags :