Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி 11 சதவீதம் அதிகமாக வசூல்

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி 11 சதவீதம் அதிகமாக வசூல்

By: vaithegi Sun, 03 Sept 2023 12:20:52 PM

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஆகஸ்டில்  ஜிஎஸ்டி 11 சதவீதம் அதிகமாக வசூல்

இந்தியா: ஆகஸ்டில் ரூ.1.59 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ... இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இவ்வாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி 11 சதவீதம் உயர்ந்து ரூ.1.59 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதி மூலமான வரிவருவாய் இவ்வாண்டு ஆகஸ்டில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி மோசடிகளைத் தடுக்க பல கண்காணிப்பு வழிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்திவுள்ளது. இதனால், ஜிஎஸ்டி வசூல் உயந்து வருவதாக மத்திய வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

gst,collection,union ministry of finance ,ஜிஎஸ்டி ,வசூல்   ,மத்திய நிதி அமைச்சகம்


மேலும் ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “என் ரசீது என் உரிமை” என்ற பெயரில் மக்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

எனவே இதன்படி, ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதுமிருந்து, ஜிஎஸ்டி இன்வாய்ஸ் கொண்டிருக்கும் 810 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களில் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சமும் மீதுமுள்ள 800 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|