Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை விடுவிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒப்புதல் .. நிர்மலா சீதாராமன்

ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை விடுவிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒப்புதல் .. நிர்மலா சீதாராமன்

By: vaithegi Sat, 18 Feb 2023 7:28:13 PM

ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை விடுவிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒப்புதல்  ..   நிர்மலா சீதாராமன்


புதுடெல்லி: தேசிய தேர்வு முகமைக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு ... ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்தாண்டு டிசம்பா் 17-ந்தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. இதையடுத்து போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதி மந்திரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;- "ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ.16,982 கோடியை விடுவிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

gst,compensation amount , ஜி.எஸ்.டி,இழப்பீடு தொகை

மேலும் ஜி.எஸ்.டி. இழப்பீடு நிதியில் புதிய நிதி இல்லாத போதும், நிலுவை தொகையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது சொந்த நிதியில் இருந்து நிலுவை தொகையை விடுவிக்க முடிவு செய்துள்ளது.எனவே இதன் மூலம் தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும்.

பென்சில் ஷார்ப்னர் மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பான அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார்.

Tags :
|