Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து 7வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல்

தொடர்ந்து 7வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல்

By: Nagaraj Sun, 02 Oct 2022 5:07:16 PM

தொடர்ந்து 7வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல்

புதுடில்லி: ஜி.எஸ்.டி வசூல் குறித்து தகவல்... செப்டம்பர் மாதம் ரூ.1.48 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,47,686 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

gst collection,ministry of finance,imports,collection,central govt ,ஜி.எஸ்.டி. வசூல், நிதியமைச்சகம், இறக்குமதி, வசூல், மத்திய அரசு

'செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.41,215 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,137 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.856 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.


தொடர்ந்து 7-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Tags :