Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

By: vaithegi Wed, 29 Mar 2023 10:37:27 AM

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 12-ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. கொரோனா பரவலுக்கு பின் முழு கல்வியாண்டாக எந்த ஒரு பாடமும் நீக்கப்படாமல் இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது

ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட வழைகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

department of school education,guidelines ,பள்ளிக்கல்வித்துறை ,வழிகாட்டு நெறிமுறைகள்

எனவே இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Tags :