Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • TNPSC குரூப் 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

TNPSC குரூப் 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

By: vaithegi Wed, 20 July 2022 12:57:51 PM

TNPSC  குரூப் 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

இந்தியா: TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குரூப் 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

guidelines,group 4 exam ,வழிகாட்டு நெறிமுறைகள் ,குரூப் 4 தேர்வு

தேர்வர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்:

முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி, தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும்.
தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு வந்துவிட வேண்டும்.
தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 9.00 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை

தேர்வு எழுத வரும் நபர்கள் கருப்பு பந்துமுனைப் பேனா (Black Ball Point Pen )-வினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு அனுமதிச் சீட்டினை (Examination Hall Ticket) தவறாமல் கொண்டு வர வேண்டும்.
தேர்வு எழுத வரும் நபர்கள் அரசின் அனைத்து கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்

தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்தப் பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags :