Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலிகள் கணக்கெடுப்பு சாதனையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள்

புலிகள் கணக்கெடுப்பு சாதனையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள்

By: Karunakaran Sun, 12 July 2020 7:54:09 PM

புலிகள் கணக்கெடுப்பு சாதனையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள்

இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு, இந்த கணக்கெடுப்பை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018-ன் 4-வது சுற்று முடிவுகளை கடந்த ஆண்டு சர்வதேசப் புலிகள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

guinness book,indian tigers,world record,modi ,கின்னஸ் புத்தகம், இந்திய புலிகள், உலக சாதனை, மோடி

இது உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. இதன் மூலம் உலகிலே அதிகம் புலிகள் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக தற்போது உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இந்திய புலிகள் கணக்கெடுப்பு இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதை பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

Tags :