Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்

துபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:51:21 PM

துபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்

உலகில் தயாரிக்கப்படும் படகுகளில் அமீரகத்தில் உருவாக்கப்படுவை சிறப்பு வாய்ந்தது. துபாயில் பிரமாண்டமான மரத்திலான படகுகள் இன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1940-ம் ஆண்டில் ஒபைத் ஜுமா பின் மஜீத் அல் பலாசி என்ற அமீரகத்தை சேர்ந்தவர் பிரபலமான பாரம்பரிய மரப்படகுகளை உருவாக்கி வந்தார். தற்போது அவரது குடும்பத்தினர் துபாய் கிரீக் பகுதியில் பாரம்பரிய மரப்படகுகளை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது மகன் மஜீத் ஒபைத் அல் பலாசி மற்றும் குடும்பத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ‘ஒபைத்’ என்ற பெயரில் பிரமாண்டமான மரப்படகை உருவாக்கி வந்தனர். தற்போது இந்த படகின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று கின்னஸ் சாதனை நிறுவனம் இந்த மரப்படகிற்கு உலகின் பிரமாண்டமான மரப்படகு என சான்றளித்துள்ளது. இதுவரை கின்னஸ் சாதனை புரிந்த உலகின் மிகப்பெரிய மரத்திலான படகு குவைத் நாட்டில் இருந்தது. தற்போது இந்த சாதனையை ஒபைத் மரப்படகு முறியடித்துள்ளது.

guinness,largest traditional wooden boat,dubai,creek area ,கின்னஸ், மிகப்பெரிய பாரம்பரிய மர படகு, துபாய், க்ரீக் பகுதி

இதுகுறித்து மஜீத் ஒபைத் அல் பலாசி கூறுகையில், இது 300 அடி நீளமும், 67 அடி அகலமும், 32 அடி உயரமும் கொண்ட படகாகும். கிட்டத்தட்ட கால்பந்து மைதானத்தின் அளவுள்ள படகு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படகின் எடை 2 ஆயிரத்து 500 டன் ஆகும். இதில் சுமார் 2 ஆயிரத்து 500 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்ல முடியும். இதன் மொத்த கொள்ளளவு 6 ஆயிரம் டன் ஆகும் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த படகில் 1,850 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிக்கு 14 நாட் (25 கி.மீ) வேகத்தில் பயணிக்க முடியும். வரும் காலங்களில் ஏமன், சோமாலியா, சூடான், எகிப்து, கென்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சரக்கு வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும், விரைவில் உலகின் அனைத்து துறைமுகங்களிலும் இந்த படகை காணமுடியும் என்று தெரிவித்தார்.

Tags :
|