Advertisement

குஜராத் தேர்தல்... 1621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

By: Nagaraj Wed, 23 Nov 2022 6:34:15 PM

குஜராத் தேர்தல்... 1621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

குஜராத்: குஜராத் தேர்தலில் அனைத்து வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் முடிந்த நிலையில், 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும். குஜராத்தில் பா.ஜ.க, இந்த முறை வெற்றியை தக்க வைக்கும் பணியில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. இந்த தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக பல கட்டங்களாக வெளியிட்டது.

assembly elections,bjp,gujarat, ,12 பேர் சஸ்பெண்ட், சட்டசபை தேர்தல், பாஜக

முதல் கட்ட தேர்தலில் 38 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் முடிந்த நிலையில், 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்க உள்ளனர்.

42 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சிலர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்த பாஜக நிர்வாகிகள் 12 பேரை சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முயன்ற 7 பேர் நேற்று கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tags :
|