Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தானியங்கி கேமராக்களுடன் கூடிய துப்பாக்கிகள்: கலிபோர்னியா காவல்துறையினர் உபயோகம்

தானியங்கி கேமராக்களுடன் கூடிய துப்பாக்கிகள்: கலிபோர்னியா காவல்துறையினர் உபயோகம்

By: Nagaraj Thu, 23 July 2020 2:54:48 PM

தானியங்கி கேமராக்களுடன் கூடிய துப்பாக்கிகள்: கலிபோர்னியா காவல்துறையினர் உபயோகம்

தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்ட துப்பாக்கி... அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், முதல் முறையாக தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளோய்டு-ன் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் தொடர்ந்து நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய பல்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் சந்தேகங்களை எழுப்பினர்.

automatic camera,gun,video,police,usa ,தானியங்கி கேமரா, துப்பாக்கி, காணொளி, போலீசார், அமெரிக்கா

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், பாதிக்கும் மேற்பட்ட போலீசார், கேமரா பொருத்தப்பட்ட உடைகளை அணிந்து வரும் நிலையில், தற்போது உறையில் இருந்து துப்பாக்கியை எடுத்ததும், காணொளி காட்சிகளை பதிவு செய்யத் துவங்கும் தானியங்கி கேமரா பொருத்தப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இதனால், துப்பாக்கி சூட்டின் போது நடந்த சம்பவங்களை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|