ஒன்ராறியோவில் ஆலங்கட்டி மழை பெய்தது
By: Nagaraj Fri, 21 Aug 2020 7:27:30 PM
ஒன்ராறியோவில் அடித்த புயல், ஆலங்கட்டி மழையைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆலங்கட்டி மழை குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோக்களில் ஒன்றில் வானிலிருந்து பனிக்கட்டிகள் விழுவதையும் தரையெங்கும் பரவியிருப்பதையும் காணலாம். கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ முதலான இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில் சாலையில் வாகனங்கள் செல்ல, வானிலிருந்து ஆலங்கட்டி மழை பெய்ய அதனூடே வாகனங்கள் செல்வதையும் காணமுடிகிறது.
Tags :
hail |
vehicles |
video |
ontario |